நலம் வாழ

ஆட்டிசத்தைப் புரிந்துகொள்வோம்

வா.ரவிக்குமார்

பலரும் நினைப்பதற்கு மாறாக, ஆட்டிசம் என்பது ஒரு நோயல்ல. அது ஒரு குறைபாடு, அவ்வளவுதான். வழிகாட்டுதலும் பயிற்சிகளும் இருந்தால், இதில் இருந்து மீள்வதற்கு வழிகள் உண்டு.

ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான குழந்தையிடம் காணப்படும் அறிகுறிகள் பற்றி ஆக்ஷன் ஃபார் ஆட்டிசம் என்னும் அமைப்பு வழிகாட்டிப் படங்களை வெளியிட்டிருக்கிறது.

முன்கூட்டியே இந்த பாதிப்பைக் கண்டறிந்து, சிறப்பு நிபுணர்களிடம் அழைத்துச் சென்று முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் ஆட்டிசம் வந்தவர்களை மேம்படுத்த முடியும்.

ஆட்டிசத்தை முன்கூட்டி அறிய அறிகுறிகள் என்ன?

பல குறைபாடுகளின் ஒன்றிணைவுதான் ஆட்டிசம். நரம்பியல் குறைபாடு காரணமாக, மூளையின் செயல்திறனில் ஏற்படும் மாற்றம் ஆட்டிசத்துக்கு வழிவகுக்கிறது. தகவலை புரிந்துகொள்வதில் ஏற்படும் பிரச்சினை காரணமாக, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களால் பார்ப்பது, கேட்பது, உணர்வதை சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியாது. இதன் காரணமாக அவர்களுடைய நடத்தை பாதிக்கப்படலாம்.

கற்றலில் மிதமான குறைபாடு, பலவீனமான சமூகத் தொடர்பு தொடங்கி முடங்கிப்போவதுவரை இவர்களுக்கு ஏற்படலாம்.

இந்தியாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: Action for Autism

SCROLL FOR NEXT