நலம் வாழ

ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு முதல் பிறந்தநாள்- அப்போலோ மருத்துவமனையில் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

ஒட்டிபிறந்த தான்சானியா நாட்டு இரட்டை குழந்தைகளுக்கு முதலாவது பிறந்த நாள் விழா அப்போலோ மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

தான்சானியா நாட்டு தம்பதியருக்கு இடுப்புக்கு கீழே ஒட்டியபடி இரட்டை குழந்தைகள் பிறந்தது. வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இந்த குழந்தைகள் கடந்த டிசம்பர் 16-ம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

முதல் பிறந்தநாள்

எரிகானா, எல்யூடி என்ற இந்த குழந்தைகள் செவ்வாய்கிழமை தங்கள் முதல் பிறந்தநாளை கொண்டாடின. இந்த பிறந்தநாள் அப்போலோ மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், பேசிய அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, “இடுப்புக்கு கீழே ஒட்டிப்பிறந்த குழந்தைகளை 20 டாக்டர்கள் அடங்கிய குழு 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வெற்றிகரமாக பிரித்தனர்.

தாய் மகிழ்ச்சி

தான்சானியா நாட்டில் உள்ள கசுமுலு கிராமத்துக்கு குழந்தைகளுடன் செல்ல உள்ள தாய் கிரேஸ் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார். குழந்தைகள் ஒட்டிப்பிறப்பது ஒரு அதிசயம்.

ஒட்டிப்பிறக்கும் இரட்டை குழந்தைகள் என்பது, 2 லட்சம் பிறப்புகளில் ஒன்றாகும். இவற்றில் 60 சதவீத குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. 35 சதவீத குழந்தைகள் பல்வேறு காரணங்களால் பிறந்த சில நாட்களுக்குள் அல்லது சில மாதங்களுக்குள் உயிரிழந்து விடுகின்றன” என்று கூறினார்.

SCROLL FOR NEXT