கூலி விவசாயி பி.ஞானமூர்த்தி (40) திருவள்ளூர் மாவட்டம் திருக்கழுச்சேரியைச் சேர்ந்தவர். அவருக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளனர்.
இது குறித்து இதய அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் என். நாகராஜன் வியாழக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:- நெஞ்சு வலியும் இருமலும் இருந்ததால் பி.ஞான மூர்த்தி கடந்த இரண்டு மாதங் களுக்கு முன்பு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.
இதயத்தில் நல்ல ரத்தத்தை எடுத்துச் செல்லும் இடது பக்க ரத்தக் குழாய் எல்லோருக்கும் சாதாரணமாக 2 முதல் 3 செ.மீ. அளவில் இருக்கும். ஆனால் இவரை பரிசோதித்ததில் ரத்தக் குழாய் 8 செ.மீ. விரிவடைந்தும் அதனுடைய கீழ் பகுதியில் இருக்கும் இதய வால்வும் பழு தடைந்து இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழு வினரும் மயக்கவியல் துறை வல்லுநர்களும் கடந்த 9.12.2013 ம் தேதி ஏழு மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண் டனர்.
அறுவை சிகிச்சையின் போது 8 செ.மீ. அளவு விரி வடைந்து இருந்த ரத்தக் குழா யும், பழுதடைந்த நிலையில் இருந்த இதய வால்வும் அகற்றப் பட்டுச் செயற்கை வால்வு பொருந்திய செயற்கை ரத்தக் குழாய் பொருத்தப்பட்டது.
நோயாளிக்கு அரிய வகை ரத்த மான ஏ நெகட்டிவ் 15 யூனிட் செலுத்தப்பட்டது. லட்சத்தில் ஒருவருக்குத்தான் இம்மாதிரி யான விரிவடைந்த ரத்தக் குழாய் காணப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இருந்தால் ரத்தக் குழாய் வெடித்து நோயாளி இறக்க நேரிட்டு இருக்கும்.
இதனை தனியார் மருத்துவ மனையில் செய்ய சுமார் ரூ.5 லட்சம் செலவாகி இருக்கும். ஆனால் அரசு பொது மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இது கட்டணம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்து 21 நாட்கள் ஆன நிலையில் உடல் நிலை முற்றிலும் குண மடைந்ததையொட்டி வெள்ளிக் கிழமை மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப் படவுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி பி. ஞான மூர்த்தியிடம் மருத்துவமனையின் தலைவர் வே.கனகசபை நலம் விசாரித்தார்.