வாதத்தைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
போதுமான அளவு அமைதியான உறக்கம் அவசியம். காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மதுவையும் புகையிலையையும் விட்டுவிட வேண்டும். மஞ்சளையும் இஞ்சியையும் உணவில் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காய்ச்சலால் உண்டாகும் சூட்டை எந்தளவுக்குத் தாங்க முடியும்?
காய்ச்சலால் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டில் உடலின் செல்கள் இறக்கத் தொடங்கிவிடும். உடலை உடனடியாகக் குளிர்விப்பது அவசியம்.
அமெரிக்கர்களிடம் உள்ள பிரபலமான தாவர உணவு வகை என்னென்ன?
சமீபத்திய பத்தாண்டுகளில் துரித உணவு, துரித உணவகங்கள் அமெரிக்காவில் பெருகிவிட்டன. தாவர உணவு வகைகளில் பிரெஞ்சு பிரை, ஆனியன் ரிங்க்ஸ், கெட்சப் போன்றவற்றைச் சாப்பிடுவதையே அமெரிக்கர்கள் தற்போது அதிகம் விரும்புகிறார்கள். இதிலிருந்து புற்றுநோய் விகிதம் அதிகரிப்பதற்கான காரணத்தைத் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது!
மரபார்ந்த சீன மருத்துவ முறை உடலை எப்படிப் பார்க்கிறது?
உடல் ஆரோக்கியமாக இருக்க யின், யான் ஆகிய இரண்டு எதிரெதிர் ஆற்றல்களின் சமநிலை அவசியம் என்று சீன மருத்துவம் கருதுகிறது. குளிர்- வெப்பம், ஆண்- பெண் என்பது போன்ற எதிர்நிலை அது. அக்குபங்சர், மூலிகைகள் வழியாக இந்த இரண்டு ஆற்றல்களும் சமநிலைப்படுத்தப்படுகின்றன.
இறைச்சியை எந்த வெப்பநிலைக்கு வேக வைக்க வேண்டும்?
வேக வைத்த மாட்டிறைச்சியின் உள் வெப்பநிலை குறைந்தபட்சம் 160 டிகிரி இருக்க வேண்டும். கோழி இறைச்சி 180 டிகிரியும் மீன் 140 டிகிரியும் இருப்பது அவசியம்.
மேக்ரோபயாட்டிக் உணவு முறையில் எதை எதையெல்லாம் சாப்பிடலாம்?
கொழுப்பு குறைந்த, கலோரிகள் குறைந்த பச்சைக் காய்கறி உணவை அதிகம் உட்கொள்வதே ‘மேக்ரோபயாட்டிக் டயட்’. ரத்த அழுத்தத்தையும் கொழுப்பையும் இந்த டயட்டின் மூலம் குறைக்கலாம்.