வர்ம மருத்துவம்
தலையிலிருந்து கழுத்துவரை 25 புள்ளிகள், கழுத்திலிருந்து தொப்புள்வரை 45 புள்ளிகள், புஜங்களில் 14 புள்ளிகள் கால்களில் 15 புள்ளிகள் என்று உடலில் 108 பாகங்களாக ஒடுங்கியிருக்கும் வர்மப் புள்ளிகளை வைத்துச் செய்யப்படும் மருத்துவம்தான் வர்ம மருத்துவம்.
தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியிலும் கேரளத்தின் சில பகுதிகளிலும் வர்ம மருத்துவ சிகிச்சை பரம்பரையாக இன்னும் செய்யப்பட்டு வருகிறது.
சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கத் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். வெளிறிய மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருப்பது அவசியம். உணவில் மக்னீசியம் போதுமான அளவு இருக்கிறதா என்று உறுதிசெய்ய வேண்டும்.
பிரக்டோஸ் சர்க்கரையுள்ள செயற்கைக் குளிர்பானங்களைத் தவிர்ப்பது அவசியம். உடற்பயிற்சியைத் தொடர்ச்சியாகச் செய்து கால்சியம் அதிகமுள்ள உணவை உண்டுவந்தால் சிறுநீரகக் கற்களைத் தவிர்க்க முடியும்.
உலகின் புராதன மருத்துவமனை
இலங்கையில் பௌத்தத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் மிகின்தலே மலையின் காலடியில்தான் புராதனமான மருத்துவமனையின் சிதிலத் தடயங்கள் காணக்கிடைக்கின்றன.
மருந்துத் தைலம் ஊற்றப்பட்டு நோயாளிகள் குளிக்கும் ஒரு தொட்டியும் கல்வெட்டும் கல் தாழிகளும் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன. கி.பி. 853 முதல் 887 வரை இலங்கையை ஆண்ட இரண்டாவது சேனன் காலத்தில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- தொகுப்பு: ஷங்கர்