நலம் வாழ

எல்லா நலமும் பெற: நெஞ்செரிச்சலுக்கு ஆப்பிள்..!

ஷங்கர்

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வந்தால் மற்றவருக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதா?

மார்பகப் புற்றுநோய் பாதித்தவர்களில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே பரம்பரையாக மார்பகப் புற்றுநோயைப் பெறுகின்றனர். இதற்கு உறுதியான காரணிகள் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. பெண்களுக்கு வயதாகும் நிலையில் மார்பகப் புற்றுநோய்க்கான சாத்தியம் கூடுகிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்குத் தடையிருக்கும் நாடுகள் எவை?

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 30 நாடுகளில் தடையும் கட்டுப்பாடுகளும் உண்டு. அமெரிக்காவில் இன்னும் தடையோ கட்டுப்பாடோ விதிக்கப்படவில்லை.

நெஞ்செரிச்சலுக்கு இயற்கையான தீர்வு உண்டா?

வாயுப்பிடிப்பு, நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படும்போது, செரிமான ரீதியான பிரச்சினைகளைச் சரி செய்வதற்கு ஆப்பிள் சாப்பிடுவது நல்ல தீர்வாக உள்ளது.

உருளைக்கிழங்கு சிப்ஸில் என்ன பிரச்சினை உள்ளது?

பெரும்பாலான உருளைக்கிழங்கு சிப்ஸ்களில் புற்றுநோயை உண்டாக்கும் ‘அக்ரிலமைட்’டின் அளவு பாதுகாப்பு அளவைத் தாண்டியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கார்போஹைட்ரேட் சத்து கொண்ட பொருட்களை அதிகமான வெப்பத்தில் சமைக்கும்போது அக்ரிலமைட் உருவாகிறது.

கொழுப்பு அதிகமாக இருப்பதால் இறால் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா?

இறாலைச் சாப்பிடுவதால் மோசமான கொழுப்பு 7 சதவீதம் அதிகரிக்கிறது. நல்ல கொழுப்பு 12 சதவீதம் அதிகமாகும்.

SCROLL FOR NEXT