நலம் வாழ

எல்லா நலமும் பெற: பற்களுக்கு நன்மை செய்யுமா சுயிங்கம்?

ஷங்கர்

கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்ன?

பதின்பருவத்தில் கஞ்சாவை பயன்படுத்தத் தொடங்குபவர்கள் நடுவயதைத் தாண்டுவதற்குள் ஐ.கியூ.-வில் எட்டுப் புள்ளிகள் குறைபாடு ஏற்படும். அத்துடன் அறிதிறனும் படிப்படியாக பாதிக்கப்படும்.

சி.டி. ஸ்கேன் எடுப்பதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

தேவைப்படாத நிலையிலும் மருத்துவர்கள் அதிகமாக சி.டி. ஸ்கேன் எடுக்கச் சொல்வது நடக்கிறது. ஆண்டுதோறும் மருத்துவ ரீதியாக கதிரியக்கத்துக்கு உட்பட்டு 25 ஆயிரம் அமெரிக்கர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது. எக்ஸ்-ரே எடுப்பதைவிட 500 மடங்கு அதிகத் தாக்கம் கொண்டது ஒரு சி.டி. ஸ்கேன்.

புற்றுநோயை எப்படித் தவிர்க்கலாம்?

சர்க்கரையை முற்றிலும் தவிருங்கள். ப்ரக்கோலி, கீரை வகைகளை நிறைய சாப்பிடலாம். அப்ரிகாட் விதைகளை தினசரி ஏழுக்கு மிகாமல் சாப்பிட்டால் நிச்சயமாக புற்றுநோயைத் தவிர்க்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உலகெங்கும் மனிதர்களின் ஆயுள்காலம் அதிகரித்து வருகிறதா?

ஆமாம். 72.5 சராசரி வயது. ஆண்களின் சராசரி ஆயுள் 69.8 ஆகவும், பெண்களுக்கு 75.3 ஆகவும் உயர்ந்துள்ளது. 1990-ல் உலக சராசரி ஆயுள் 65.1 ஆக இருந்தது. ஜப்பான் 83.9 வயது சராசரி ஆயுளைக் கொண்ட நாடாக உள்ளது. குறைந்தபட்ச சராசரி ஆயுளைக் கொண்ட நாடாக மத்திய ஆப்பிரிக்க குடியரசு உள்ளது.

சுயிங்கம் சாப்பிடுவதால் பற்குழிகளைத் தவிர்க்கலாமா?

சர்க்கரையில்லாத சுயிங்கம் மெல்லுவதை பல் மருத்துவர்கள் ஊக்குவிக்கின்றனர். பற்குழியை ஏற்படுத்தும் அமிலத்தை சுயிங்கம் சவைப்பதால் ஏற்படும் எச்சில் நீர்க்கச் செய்கிறது. சாப்பாடுக்குப் பிறகு கொஞ்சூண்டு சுயிங்கத்தை எடுத்துக் கொண்டு 15 நிமிடங்கள் சுவைக்கலாம்.

SCROLL FOR NEXT