‘மாஸ்பெக் பேனா’ புற்றுநோய் சிகிச்சைக்கு எப்படி உதவுகிறது?
ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை பத்து நொடிகளில் அறிய உதவக்கூடிய கருவிதான் ‘மாஸ்பேக் பேனா’. இதன் துல்லியம் 96 சதவீதம் என்கின்றனர் ஆய்வாளர்கள். புற்றுநோயைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி, அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பிறகு, கட்டி முழுமையாக அகற்றப்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் ‘மாஸ்பெக் பேனா’ உதவுகிறது.
சரியான ஊட்ட உணவு இல்லாததால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
போதிய ஊட்டமான உணவு இல்லாததால் உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவர் இறப்பதாகப் புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. மரணத்தைத் தவிர்ப்பது மட்டுமின்றி போதிய ஊட்டமான உணவு, உடல் ஆரோக்கியத்தைப் பல வகைகளிலும் மேம்படுத்துவதாக உள்ளது.
உறவுகளுக்கும் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
வயதுவந்தோரின் அபிவிருத்தி தொடர்பான ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையில், நீடித்த ஆயுள் - ஆரோக்கியத்தை உறவுகள் மேம்படுத்துகின்றன என்று கூறப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பது, குடிநோய் ஆகியவற்றுக்கு இணையாகத் தனிமையும் மனிதர்களைக் கொல்லும் ஒன்றுதான்!
ஆலிவ் எண்ணெய் அதிக ஆரோக்கியம் கொண்டதா?
ஆலிவ் எண்ணெய் நூறு சதவீத கொழுப்புள்ளது. நார்ச்சத்தோ தாதுச்சத்துகளோ எதுவும் கிடையாது. அதிகம் உட்கொண்டால் இதயத்தைப் பாதிக்கலாம்.
இதய நோய் வருவதை எப்படித் தடுக்கலாம்?
எப்போதும் சரியான உடல் எடையைப் பராமரியுங்கள். புகைப்பிடிக்க வேண்டாம். தினசரி உடற்பயிற்சி அவசியம். காய்கறிகளும் பழங்களும் நிறைய சாப்பிட வேண்டும்.