ஒரு நாளைக்கு நார்ச்சத்து உணவு ஒருவருக்கு எவ்வளவு தேவை?
உங்கள் உணவில் 40 கிராம் அளவு நார்ச்சத்து இருக்கவேண்டும். பச்சைக் காய்கறி, பழங்கள், முழுதானியங்களை உணவில் அதிகரிப்பதன் மூலம் அதை அடையலாம்.
திட உணவில் இனிப்பு, குடிக்கும் திரவத்தில் இனிப்பு. எது அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது?
பானங்களில் உள்ள சர்க்கரை, எக்ஸ்பிரஸ் ரயிலைப் போல ரத்தத்தில் உடனடியாக மோதிக் கலக்கும். குளுக்கோஸ் உடனடியாக கல்லீரலுக்குப் போய் அது கொழுப்பாக மாறிவிடும். இதய நோயை உடனடியாகக் கூப்பிடக் கூடியது.
சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தவிர்க்க முடியுமா?
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பழுப்பு மஞ்சளாக சிறுநீர் இருக்கிறதா என்று பாருங்கள். உணவில் மெக்னீசியம் சத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ‘ஃப்ரூக்டோஸ்’ இனிப்பு சேர்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முறையான உடற்பயிற்சி தேவை. கால்சியம் அதிகமுள்ள உணவு வகைகளைச் சேருங்கள்.
இனிப்பு இல்லாத சோடாவால் பலன் உண்டா?
உடலின் நீரேற்றத்துக்குச் சாதாரண நீரைப் போலவே சோடாவும் உதவும். வயிறு உப்புசம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை சோடா சமாளிக்கக் கூடிய பண்பு உண்டு. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இதய நோய் வருவதைத் தடுக்கும் அம்சம் சோடாவில் உள்ளது. எலும்புகளில் கால்சியம் சத்தை நிலைநிறுத்த சோடா உதவுகிறது.
வாதத் தாக்குதலுக்குப் பிறகு மூளை நிரந்தரமான பாதிப்பை அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வாதத் தாக்குதல் வந்து ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவ உதவி அவசியம். ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகளால் மூளை நிரந்தரமாகச் சேதமடைவதை நிறுத்தலாம். மரணம் கூடத் தவிர்க்கப்படலாம்.