நமது தலைமுடியின் வலு எவ்வளவு?
அலுமினியத்தின் பலத்தை ஒரு முடியின் இழை கொண்டிருக்கிறது.
உடல் எடை குறைப்புக்குக் காய்கறி ஜூஸ் பருகுவது உதவுமா?
காய்கறி ஜூஸ் அருந்தாதவர்களைவிட தினசரி காய்கறி ஜூஸ் பருகுபவர்களுக்கு எடை குறைவதற்கு நான்கு மடங்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
பசுவின் பாலில் அதிகத் தாதுச் சத்துக்கள் இருக்கின்றனவா?
பாலில் அதிகம் தாதுச்சத்து இல்லை என்பதே உண்மை. உடலை வலுவூட்டும் மாங்கனீஸ், குரோமியம், செலினியம், மக்னீசியம் ஆகியவை காய்கறிகளிலும் பழங்களிலுமே நிறைந்துள்ளன. கால்சியமும் மக்னீசியமும் உடலில் 2:1 பங்கு விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். ஆனால், பாலில் 10: 1 பங்காக உள்ளது. கால்சியம் சத்துக்காக பாலையே அதிகம் நம்பியிருப்பது மக்னீசியம் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.