நலம் வாழ

எல்லா நலமும் பெற: ஊசி பயம் போக்குவது எப்படி?

ஷங்கர்

மீன் சாப்பிடுவது மனநிலையில் மேம்பாட்டை ஏற்படுத்துமா?

மீன் எண்ணெய் உட்கொள்வதால் பை போலார் டிஸ் ஆர்டர், நாள்பட்ட மன அழுத்தம் போன்றவை குறைகின்றன. மீன்கள் அதிகம் உட்கொள்ளப்படும் நாடுகளில் மன அழுத்தப் பிரச்சினை கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

நீரிழிவு நோய்க்கும் அல்சைமர் (ஞாபகமறதி) நோய்க்கும் தொடர்பு உண்டா?

சாதாரணமாக ஒருவருக்கு அல்சைமர் நோய் தாக்குவதற்கு உள்ள சாத்தியத்தைவிட, நீரிழிவு நோய் இருப்பவர்களை அல்சைமர் தாக்குவதற்கு இரண்டு மடங்கு சாத்தியம் அதிகம்.

அல்சைமரை வரும்முன் தடுக்க வாய்ப்பு உண்டா?

பச்சைக் காய்கறிகள், பழங்கள், பாதாம், பிஸ்தா போன்ற கொட்டைகள், பீன்ஸ் போன்றவற்றைத் தொடர்ந்து உண்பதால் அல்சைமர் தாக்குவது 48 சதவீதம்வரை தடுக்கப்படுகிறது.

ஊசி போடும்போது பயப்படாதவர்கள் குறைவு. அந்த பயத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஊசி போடும்போது ஊசியையோ அது போடப்படும் இடத்தையோ பார்க்காமல் இருந்தால் பயம் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரையின் வெவ்வேறு வகைகள் எவை?

பிரக்டோஸ் இயற்கையாகவே கனிகளில் உள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சீனி அல்லது சர்க்கரை சுக்ரோஸ் ஆகும். இது பெரும்பாலும் கரும்பிலிருந்து எடுக்கப்படுகிறது. பிரக்டோஸ் மிகையாக உள்ள கார்ன் சிரப் உணவை இனிப்பூட்டச் சேர்க்கப்படுகிறது. மலிவானதும் கூட.

SCROLL FOR NEXT