நலம் வாழ

டாக்டர் எல்.மகாதேவனுக்குதன்வந்திரி ஆயுர்வேத விருது

Guest Author

ஒவ்வொரு வருடமும் ஆயுஷ் மருத்துவத் துறையில் சிறப் பான பங்களிப்பை அளிக்கும் மருத்துவர்களுக்கு தன்வந்திரி ஆயுர்வேத விருதை ஆயுஷ் அமைச்சகம் வழங்கிவருகிறது. விருதைப் பெறுபவர்கள் ஆயுஷ் துறையில் குறைந்தபட்சம் 20 வருடங்களாவது அனுபவம் பெற்ற வர்களாக இருக்க வேண்டும். மேலும் தேசிய, சர்வதேச அளவில் ஆயுர்வேதத்தை மேம்படுத்துதல், கற்பித்தல், ஆராய்ச்சி போன்ற பணிகளில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியிருக்க வேண்டும். இவற்றின் அடிப்படையிலேயே தன்வந்திரி ஆயுர்வேத விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ‘தன்வந்திரி ஆயுர்வேத விருது-2023’ இந்திய அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஆயுர்வேத மருத்துவ ரான எல்.மகாதேவன் இந்த விருதைப் பெற்றார். ஆயுர்வேத மருத்துவத் துறையில் எல்.மகாதேவன் நீண்ட காலமாக செய்த சேவையைப் பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது. தன்வந்திரி சிலையும், ரூ. 5 லட்சம் தொகையும் விருதாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆயுர்வேத நாள் கொண்டாட்டத்தின்போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன. - எல்னாரா

SCROLL FOR NEXT