மாயா பஜார்

ஓட்டுநரின் இருக்கை ஏன் வலப்பக்கம் இருக்கிறது? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

இந்தியாவில் பேருந்து, கார் போன்ற வாகனங்களில் வலது பக்கம் ஓட்டுநர் இருக்கை உள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளில் வாகனங்களின் இடது பக்கம் ஓட்டுநர் இருக்கை இருக்கிறதே ஏன், டிங்கு? – சு.அஷ்மிதா, 8-ம் வகுப்பு, புனித அந்தோணியார் மெட்ரிக். பள்ளி, கணேசபுரம், கோவை.

அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் குதிரையில் செல்லும்போது, எதிரில் வருபவர்களிடம் கைகுலுக்கவும் வாளை எடுத்துச் செல்லவும் வலது கையைப் பயன்படுத்தினர்.

அதனால் சாலையில் இடப்பக்கம் செல்வதை வழக்கமாகக் கொண்டனர்.

அவர்கள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தபோது, இங்கும் சாலைகளில் இடப்பக்கம் செல்வதைக் கடைப்பிடித்தனர்.

இடப்பக்கம் செல்லும் கார், பேருந்து போன்ற வாகனங்களில் ஓட்டுநர் வலப்பக்கத்தில் அமர்ந்திருந்தால்தான் சாலையின் நடுப்பகுதியை நன்றாகப் பார்க்க முடியும் என்பதால் ஓட்டுநரின் இருக்கை வலப்பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் சாலையின் வலப்பக்கத்தில் வாகனங்கள் செல்வதால், ஓட்டுநரின் இருக்கை இடப்பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது ஒரு நாடு பின்பற்றும் சாலை விதியைப் பொறுத்து, இடப்பக்கம் சென்றால் வலப்பக்கத்திலும் வலப்பக்கம் சென்றால் இடப்பக்கத்திலும் ஓட்டுநரின் இருக்கை அமைக்கப்படுகிறது, அஷ்மிதா

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT