மாயா பஜார்

கடலுக்குள் இருக்கும் எரிமலைகள் ஏன் அணையவில்லை? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

நம் வயிற்றிலிருந்து சில நேரம் விநோத ஒலிகள் கேட்கின்றனவே ஏன், டிங்கு? - ஜி. இனியா, 9-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பStomachள்ளி. கிருஷ்ணகிரி.

ஒரு நீண்ட குழாய் போன்ற வடிவில் இருக்கிறது நம் செரிமான மண்டலம். நாம் சாப்பிடும் உணவு, குடிக்கும் நீர் போன்றவற்றோடு பேசும்போது காற்றும் உள்ளே சென்றுவிடுகிறது.

          

இவற்றைச் செரிமானம் செய்யவும் முன்னோக்கித் தள்ளவும் குடல்தசைகள் சுருங்கிச் சுருங்கி விரிகின்றன. அப்போது காற்றும் நீரும் ஒன்றோடு மற்றொன்று மோதுவதால் விநோதமான ஒலிகள் உருவாகின்றன. உணவு செரிமானம் ஆன பிறகு வயிறு காலியாக இருக்கும்போது, காற்றும் நீரும் மட்டுமே எஞ்சியிருக்கும்.

அப்போதும் சத்தம் அதிகமாகக் கேட்கும். இதைத்தான் பசியால் வயிறு கத்துவதாகச் சொல்கிறோம். இந்தச் சத்தம் இயல்பானதுதான்.

அதனால் பயம் ஒன்றும் இல்லை. ஆனால், இந்தச் சத்தத்துடன் கடுமையான வயிற்று வலி, வாந்தி, வயிற்று உப்புசம் ஆகியவை இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும், இனியா.

கடலுக்குள் இருக்கும் எரிமலைகள், கடல் நீரால் அணைந்திருக்க வேண்டும். ஆனால், ஏன் அவ்வாறு அணையவில்லை, டிங்கு? - ஜெ. பாலவிக்னேஷ்வரன், 6-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நிலைப் பள்ளி. தங்களாச்சேரி, மதுரை.

சுவாரசியமான கேள்வி. கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைக் குழம்பு மிக மிக அதிக வெப்பத்தைக் கொண்டுள்ளது.

பூமியின் உள்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த அழுத்தத்தால் சூடாக இருக்கும் எரிமலைக் குழம்பு மேல்நோக்கித் தள்ளப்படுகிறது. அப்போது நீரின் அழுத்தம் அதைக் கீழ் நோக்கி அழுத்துகிறது.

ஆனால் நீரின் அழுத்தத்தைவிட பூமியின் உள்புற அழுத்தம் அதிகமாக இருப்பதால், எரிமலைக் குழம்பு வெளியே வருகிறது. அப்படி வரும்போது, எரிமலைக் குழம்பைச் சுற்றியுள்ள நீர் சட்டென்று குளிர்விக்கப்படுகிறது. இதனால் குழம்பு பாறையாக மாறி மேலும் எரிமலைக் குழம்பு வெளியேறாமல் தடுத்துவிடுகிறது.

மீண்டும் பூமியின் உள்புறத்திலிருந்து அழுத்தம் அதிகமாகும்போது, இந்த எரிமலைக் குழம்பு பாறையை உடைத்துக்கொண்டு வெளிவருகிறது.

ஒரு பொருள் எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. இது வேதிவினையால் நடைபெறுகிறது. ஆனால், எரிமலைக் குழம்பு என்பது வேதிவினையால் நடைபெறுவதில்லை. வெப்ப ஆற்றலால் உருவாகிறது, பாலவிக்னேஷ்வரன்.

SCROLL FOR NEXT