மாயா பஜார்

வானில் பறந்த முதல் பறவை எது? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பூமியில் தோன்றிய உயிரினங்களில் இறக்கை முளைத்து வானில் பறந்த பறவை எது? - எம். யாதவ மூர்த்தி, 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி, சின்னப்பள்ளத்தூர், தர்மபுரி.

பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் முதலில் தோன்றியது பறவை அல்ல. டைனசோர் களுக்கும் பறவைகளுக்கும் இடையே தோன்றியதாக ஆர்கியாப்டெரிக்ஸ் (Archaeopteryx) எனும் உயிரினம் கருதப்படுகிறது. இது 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.

டைனசோர்களின் ஒருவகையான Theropod உயிரினத்திலிருந்து பரிணமித்து உருவானது. இது ஊர்வனவற்றின் பண்புகளையும் பறவைகளின் இறக்கைகளையும் கொண்டதாக இருந்தது.

அதாவது அலகில் பற்கள், கால்களில் செதில்கள், நீண்ட வால் ஆகியவற்றையும் இறக்கைகளையும் கொண்டிருந்தது.

இது இன்றைய நவீனப் பறவைகளைப் போல் பறந்திருக்குமா என்று தெரியவில்லை. குறுகிய உயரத்தில் மரத்துக்கு மரம் பறந்திருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள், யாதவ மூர்த்தி.

SCROLL FOR NEXT