மாயா பஜார்

தமிழ்நாட்டுச் சின்னத்தில் உள்ள கோபுரம் எது? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

தமிழ்நாட்டில் எத்தனையோ உயர்ந்த கோயில் கோபுரங்கள் உள்ள போதும், தமிழ்நாடு அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் இடம்பெற்றுள்ளதே, ஏன் டிங்கு? - சு. இமயா, 4- ம் வகுப்பு, புனித அந்தோணியார் மெட்ரிக். பள்ளி, கணேசபுரம், கோவை.

தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமியார் தமிழ்நாட்டுச் சின்னம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ரசிகமணி டி.கே.சி.யிடம் விவாதித்தார். அப்போது ஆண்டாள் கோயில் கோபுரத்தை வைத்துச் சின்னம் உருவாக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

எனவே மதுரையைச் சேர்ந்த ஓவியரும் பேராசிரியருமான கிருஷ்ணராவிடம்‘ சின்னம் உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரும் கோபுரம், அசோகரின் சிங்கத்தூண், தேசியக் கொடிகள் ஆகியவற்றை ஒரு வட்டத்துக்குள் உருவாக்கி, தமிழ்நாடு அரசு வாசகத்துடன் கொடுத்தார்.

அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு இந்தச் சின்னம் குறிப்பிட்ட மத அடையாளத்தைக் குறிப்பதாகச் சொல்லி ஆட்சேபித்தார். இது தமிழ்நாட்டின் உயர்ந்த கட்டிடக் கலையைக் குறிப்பதாகச் சொல்லி, ஒப்புதல் பெறப்பட்டது.

அதனால் தமிழ்நாட்டுச் சின்னத்தில் இடம்பெற்ற கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் என்றே நம்பப்பட்டது.

ஆனால், சின்னத்தை உருவாக்கிய கிருஷ்ணராவ், தான் பிறந்து வளர்ந்த மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலின் மேற்கு கோபுரத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தச் சின்னத்தை உருவாக்கியதாகச் சொல்லியிருக்கிறார், இமயா.

SCROLL FOR NEXT