மாயா பஜார்

நமக்கு ஏன் வலிக்கிறது? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

நமக்கு வலியே தெரியாவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நமக்கு ஏன் வலிக்கிறது, டிங்கு? - கே. லாவண்யா, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பத்தூர்.

வலி தெரியாவிட்டால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றும். ஆனால், வலி தெரியாவிட்டால் நமக்கு அது நல்லதாக இருக்காது. உடலில் அடிபட்டு ரத்தம் வருகிறது.

          

வலி தெரியாவிட்டால் ரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும். நீங்கள் அதைக் கவனிக்காவிட்டால் ஆபத்தாகி விடும். ரத்தம் வருவதைக் கவனித்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள வலி தெரிந்தாக வேண்டும்.

அப்படித் தெரிந்தால்தான் உடனே அந்தப் பகுதியில் பிரச்சினை என்று, அதைச் சரி செய்வதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். உடலில் எந்த உறுப்பில் பிரச்சினை என்றாலும் உடனே மூளை நரம்புகளுக்குக் கட்டளையிட்டு, வலி மூலம் நமக்குத் தெரிய வைக்கிறது.

நாமும் தலைவலி, வயிற்றுவலி, மூட்டு வலி என்று வந்தவுடன் அதற்கு ஏற்ற மாதிரி சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம். இப்போது சொல்லுங்கள் லாவண்யா, வலி நல்லதுதானே?

SCROLL FOR NEXT