பிரபல மருத்துவ எழுத்தாளர் கு.கணேசன், சிறார்களுக்காக 'கோகுலம்' ஆங்கில இதழில் எழுதிய மருத்துவத் தொடர் 'Know your body.' இந்தத் தொடர் தற்போது இரண்டு பாகங்கள் கொண்ட நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் மருத்துவ அறிவியலை எளிமையாக எழுதுவதற்கு அறியப்பட்ட டாக்டர் கணேசன், ஆங்கிலத்திலும் அதே போன்ற எளிமையான நடையில் மருத்துவத் தகவல்களை அறிவியல்பூர்வமாக விளக்கியுள்ளார்.
மருத்துவம், உடல்நலம் சார்ந்து மூளை நலம், எலும்பு மூட்டுகள், காது-மூக்கு தொண்டை, கண், தோல், பல், வயிறு, உடல் வளர்ச்சி, இதய நலம், மகளிர் நலம் போன்றவற்றைப் பற்றிப் பொதுவாக எழும் அடிப்படை சந்தேகங்களுக்கு இந்த நூல் விடை அளிக்கிறது.
முதலுதவி, மருத்துவக் கருவிகள், மருத்துவ நடைமுறைகள்-நுட்பங்கள் போன்றவற்றைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளன. உடல் பராமரிப்பு, நோய்த் தடுப்பு, அடிப்படை மருத்துவ அறிவை ஆங்கிலத்தில் அறிய விரும்புபவர்களுக்கு இந்த நூல் உதவும்.
சிறார்கள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் இந்த அடிப்படைத் தகவல்களை அறிந்து கொண்டு, சந்தேகங்களைக் களைந்து கொள்ளலாம். இது ஒரு கையடக்க மருத்துவக் களஞ்சியம்.
Know your body- Two Parts, Dr. G.Ganesan,
Thamarai Brothers Media Pvt. Ltd., தொடர்புக்கு: 75500 09565