l குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள், ஸ்டீவன் செப்-அன்ட்ரூ ஆண்ட்ரி,
தமிழில்: இ.ஹேமபிரபா, பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044-24332424
குழந்தைகள் எப்படிப் பிறக்கிறார்கள் அல்லது உருவாகிறார்கள் – குழந்தைகள் தெரிந்துகொள்ள விரும்பும், அடிக்கடி கேட்கும் மற்றொரு கேள்வி இது. இன்றைய குழந்தைகளுக்குப் பூச்சிகள், பறவைகள் போன்றவை இனப்பெருக்கம் செய்யும் முறை குறித்து ஓரளவு தெரிந்திருக்கிறது, பாடப் புத்தகங்களிலும் விளக்கப்படுகிறது.
இருந்தாலும் கூட, மனிதக் குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் என்பது குறித்த கேள்விகள் அவர்களிடம் இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் தருவதே சரியான முறையாக இருக்கும். அநேகமாகத் தமிழில் இந்த விஷயம் சார்ந்து குழந்தைகளே புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வெளியாகியுள்ள முதல் புத்தகம் இது எனச் சொல்லலாம்.