‘கல் சேகரித்தல்’ விளையாட்டை 10 பேர்வரை விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
ஒரே நேர்க்கோட்டில் எல்லோரும் வரிசையாக நின்றுகொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் எதிரே சுமார் 15 அடி தொலைவில் சிறிய வட்டம் ஒன்றை வரைந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு வட்டத்திலும் 6 சிறு கற்களை வைத்துவிடுங்கள். நடுவராக ஒருவர் இருக்க வேண்டும்.
அடுத்து என்ன?
நடுவர் ‘ரெடி’ என்றதும், எல்லோரும் வேகமாக ஓடிச் சென்று, வட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் கற்களில் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, நின்ற இடத்தில் வைத்துவிட வேண்டும். பிறகு மீண்டும் கல் எடுக்க ஓட வேண்டும். இப்படி 6 கற்களையும் தான் நின்ற இடத்தில் முதலாவதாகச் சேர்ப்பவரே வெற்றிபெற்றவர்.
ஒவ்வொரு முறையும் ஒரு கல்லை மட்டுமே எடுத்து வர வேண்டும். கல்லை எடுத்துவரும்போது, கீழே தவற விடக் கூடாது. கல்லை நின்ற இடத்தை நோக்கி வீசக் கூடாது என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
(இன்னும் விளையாடலாம்)