மைனா மைனா மைனா
மஞ்சள் வாய் மைனா
மழலை போன்ற பேச்சால்
மனதை மயக்கும் மைனா
அருகே நெருங்கிப் போனாலும்
கொஞ்சிப் பேசும் மைனா
அன்பு காட்டும் அனைவரையும்
அழகாய் அழைக்கும் மைனா
அப்பா முதல் பாப்பா வரை
அனைவருக்கும் பிடிக்கும் மைனா
எங்க வீட்டு மைனா
எனக்குப் பிடித்த மைனா!