மாயா பஜார்

புதிர் பக்கம் - 12/10/2016

செய்திப்பிரிவு

வித்தியாசம் என்ன?

மேலே இருக்கும் இரண்டு படங்களுக்கும் இடையில் 12 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

விடுகதை

1. சுற்றும்போது ஆனந்த சுகம். அது என்ன?

2. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?

3. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன். பள்ள நீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?

4. கலர்ப்பூ கொண்டைக்காரி. காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன?

5. கந்தல் துணி கட்டியவன். முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?

6. படபடக்கும், பளபளக்கும், மனதுக்குள் இடம் பிடிக்கும். அது என்ன?

7. தலையில் கிரீடம் வைத்த தங்கப் பழம். அது என்ன?

8. நிலத்தில் நிற்காத செடி, நிமிர்ந்து நிற்காத செடி. அது என்ன?

9. எவ்வளவு ஓடினாலும் வியர்வையும் வராது; திருடனுக்கும் பிடிக்காது. அது என்ன?

10. கையையும் கழுத்தையும் வெட்டினாலும், மிகவும் நல்லவர். யார் அவர்?

விடுகதை போட்டவர்:
கே. சதிஷ், 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
பொதட்டூர் பேட்டை, திருவள்ளூர்.

கண்டுபிடி

எந்த யானை எந்தப் பழத்தை வைத்திருக்கிறது என்று சொல்லுங்களேன்.

சுடோகு

எல்லா வடிவங்களும் ஒவ்வொரு வரிசையிலும், ஒரே வடிவங்கள் அருகருகே வராமலும் காலிக் கட்டத்தை நிரப்புங்கள்.

SCROLL FOR NEXT