மாயா பஜார்

நீங்களே செய்யலாம்: காகிதத்தில் அழகான பூ!

மோ.வினுப்பிரியா

குழந்தைகளே, கோடை விடுமுறையில் வீட்டுக்கு உபயோகமான பொருளை செய்து பார்க்க ஆசையா? அப்போ, காகிதத்தில் அழகான பூவைச் செய்து பார்க்கிறீர்களா?

தேவையான பொருட்கள்

கத்தரிக்கோல், பசை, வண்ணக் காகிதங்கள்

செய்முறை

1. முதலில் பச்சை நிறக் காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதைப் பாதியாக மடக்கி, பசையைக் கொண்டு ஒட்டுங்கள்.

2. மடக்கிய பகுதியில், சம இடைவெளியில் காகிதத்தை வெட்டுங்கள். வெட்டிய பின்னர், படத்தில் காட்டியதுபோலக் காகிதத்தை சுருட்டிக்கொள்ளுங்கள்.

3. இப்போது, வண்ணக் காகிதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். படத்தில் காட்டியது போல வண்ணப் பூக்களைச் செய்யுங்கள்.

4. அந்தப் பூக்களைப் பச்சை நிறக் காகிததின் மேல் ஒட்டுங்கள். அழகான காகிதப் பூ தயாராகிவிட்டதா?

இதை உங்கள் வீட்டின் சுவரில் ஒட்டிவைக்கலாம் அல்லது உத்தரத்தில் தொங்க விடலாம்.

SCROLL FOR NEXT