மாயா பஜார்

குழந்தைப் பாடல்: சூரியகாந்தி..!

செய்திப்பிரிவு

வண்ணப் பூவும் நீதானே

வட்டப் பூவும் நீதானே

சூரியப் பெயரைக் கொண்டாலும்

சுடாத பூவும் நீதானே.

பெரிய பூ என்றாலே

தலையில் வைக்க மாட்டார்கள்

மஞ்சள் பூ உன்னையே

பெண்கள் சூடி மகிழ்வாரே.

எல்லாப் பூவும் எப்போதும்

ஒரே திசையில் நின்றிருக்கும்

சூரியன் இருக்கும் திசையையே

எப்போதும் நீயோ பார்த்திருப்பாய்.

அழகுப் பூக்கள் அனைத்தையும்

பூவாய் மட்டுமே பார்ப்பார்கள்

சூரியகாந்திப் பூ நீ மட்டுமே

எண்ணெயாய் மாறி உணவாவாய்.

கொஞ்சம் மழை பெய்தாலும்

நிறைவாய் வருமானம் தந்திடுவாய்

உழவர் மனம் மகிழ்ந்திடவே

நல்ல மகசூல் தந்திடுவாய் !

-ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

SCROLL FOR NEXT