கூட்டமாகப் பறவைகள்
குளத்தைத் தேடிச் செல்லுதே!
ஓட்டமாக எறும்புகள்
உணவைத் தேடிச் செல்லுதே!
பொழுது முழுதும் தேனீக்கள்
பூக்கள் தேடிச் செல்லுதே!
உழுது களைக்கும் காளைகள்
உழைக்கக் கழனி செல்லுதே!
இனிக்கும் கனிகள் தேடியே
இரவில் வெளவால் செல்லுதே!
தனித்துப் பறக்கும் ஆந்தையும்
தவளை பிடிக்கச் செல்லுதே!
இவற்றைப் போல நீங்களும்
என்றும் உங்கள் கடமையைக்
கவனமாக ஆற்றிடக்
காற்றாய்ப் பறந்து செல்லுவீர்!
என்றும் அழியாச் செல்வமாய்
இருக்கும் உயர்ந்த கல்வியை
நன்கு பரப்பும் பள்ளியை
நாளும் தேடிச் செல்லுவீர்!
- அணைக்குடி சு. சம்பத், தஞ்சாவூர்