மாயா பஜார்

செல்லப் பிராணிகள் ஓட்டல்!

செய்திப்பிரிவு

நாம் வேடிக்கையாகவும், விநோதமாகவும் நினைக்கும் விஷயங்கள் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கும். மனிதர்கள் தங்குவதற்காக நம் நாட்டில் ஓட்டல்கள் இருப்பது போல செல்லப் பிராணிகளைத் தங்க வைப்பதற்காக அமெரிக்காவில் ஓட்டல்கள் இருக்கின்றன!

நாமெல்லாம் குடும்பத்துடன் சுற்றுலா சென்றால் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை வீட்டில் விட்டுவிட்டோ அல்லது நண்பர்களிடமோ கொடுத்துவிட்டு செல்வோம். ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. செல்லப் பிராணிகளையும்கூட தங்களுடன் கூட்டிக்கொண்டு போவார்கள். செல்லப் பிராணிகளை ஓட்டல்களில் தங்க வைக்க முடியாதல்லவா? ஆனால், இவற்றைத் தங்க வைப்பதற்காகத் தனியாக ஓட்டல்கள் இருக்கின்றன. இந்த ஓட்டல்களில் செல்லப் பிராணிகளைத் தங்க வைத்துவிடுகிறார்கள்.

செல்லப் பிராணிகள் தங்குவதற்கு ஏற்பக் கட்டணங்களும் உண்டு. ஒரு நாள் வாடகை 2 ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து 8 ஆயிரம் வரைகூட வசூலிக்கப்படுகின்றன. செல்லப்பிராணிகளுக்காக ஓட்டல்களில் தனியாக டி.வி., ஜிம், பொழுதுபோக்கு வசதிகளும் உண்டு. அமெரிக்காவின் எல்லா முக்கிய நகரங்களிலும் செல்லப் பிராணிகளுக்கான ஓட்டல்கள் இன்று வந்துவிட்டன. குறிப்பாக நாய்களுக்கான ஓட்டல்கள்தான் அதிகம்!

தகவல் திரட்டியவர்: கே. கோபிநாத், 9-ம் வகுப்பு,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.

SCROLL FOR NEXT