உங்கள் வீட்டில் அலங்காரப் பொருட்கள் இருக்கின்றனவா? அந்தப் பொருட்களைக் காசு கொடுத்து உங்கள் வீட்டில் வாங்கி வைத்திருப்பார்கள். அதிகம் செலவில்லாமல் நீங்களேகூட அலங்காரப் பொருள் ஒன்றைச் செய்து வீட்டை அலங்கரிக்கலாம். அந்தப் பொருளை செய்து பார்க்க நீங்கள் தயாரா?
தேவையான பொருட்கள்
காகிதக் கோப்பை (கப்), கத்தரிக் கோல், துளையிடும் மெஷின், நூல்.
செய்முறை
1. காகிதக் கோப்பையை எடுத்துக்கொண்டு படத்தில் காட்டியதுபோல சம இடைவெளியில் வெட்டிக்கொள்ளுங்கள்.
2. கோப்பையின் எதிரெதிர் பக்கங்களில் துளையிடும் மெஷின் உதவியுடன் துளைகளைப் போட்டுக்கொள்ளுங்கள்.
3. அந்தத் துளைகள் வழியாக நூலை நுழைத்து முடிச்சுப் போட்டுக்கொள்ளுங்கள்.
4. இப்போது காகிதக் கோப்பை கூடை தயாராகிவிட்டதா?
5. கூடையை அழகுப்படுத்த, படத்தில் காட்டியதுபோல பொம்மை உருவத்தை வரைந்துகொள்ளுங்கள். கூடைக்குள் சிறு பொம்மை, காகிதப் பூக்களை வைத்தால் அலங்காரப் பொருள் தயார். அதை சுவரில் மாட்டி வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.