இரவில் தூங்கும்போது அழகான அலங்கார விளக்குகளைச் சிலர் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். இந்த அலங்கார விளக்கை நீங்களேகூடச் செய்யலாம். செய்து பார்க்க நீங்கள் தயாரா?
என்னென்ன தேவை?
காகிதம், கத்தரிக்கோல், ஸ்டேப்ளர், மெழுகுவர்த்தி
எப்படிச் செய்வது?
1. ஒரு காகிதத்தை எடுத்துப் பாதியாக மடித்துக்கொள்ளுங்கள்.
2. படத்தில் காட்டியுள்ளதுபோல காகிதத்தைச் சம இடைவெளியில் வெட்டுங்கள்.
3. இப்போது காகிதத்தை உருண்டையாகச் சுருட்டுங்கள்.
4. சுருட்டிய பிறகு இரு முனைகளிலும் ஸ்டேப்ளர் கொண்டு இணையுங்கள்.
5. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி இதை நடுவில் வையுங்கள். ஒரு அழகான விளக்கு தயாராகிவிட்டதா?