மாயா பஜார்

எப்பவும் டி.வி. பார்ப்பீர்களா?

செய்திப்பிரிவு

நீங்கள் டி.வி. அதிகம் பார்ப்பீர்களா? அதுவும் பள்ளிக்கூடம் விடுமுறை விட்டால் டி.வி.யை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டுதானே இருப்பீர்கள். தொடர்ந்து ரொம்ப நேரம் டி.வி. அதிகம் பார்த்தால், நுரையீரல் பாதிக்கப்படுமாம்.

நம்மைப் போன்ற குட்டி பசங்க ரொம்ப நேரம் டி.வி. பார்ப்பதால் வரும் பாதிப்புகளைப் பற்றி ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழக பேராசிரியர் டோரு சிரகாவா என்பவர் ஒரு ஆராய்ச்சி செய்தார். அந்த ஆராய்ச்சியோட முடிவுகளைக் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் அவர் தெரிவித்துள்ளார். அந்த முடிவுகளைப் பார்ப்போமா?

# நீண்ட நேரம் டி.வி. பார்ப்பது கண்களை மட்டுமல்ல நுரையீரலையும் பாதிக்கும்.

# டி.வி. நிகழ்ச்சிகளை 4 முதல் 5 மணி நேரம்வரை எந்தவிதமான உடல் அசைவும் இல்லாமல் உட்கார்ந்தபடியே பார்த்தால், நுரையீரலில் அடைப்பை ஏற்படுத்தும். இதற்கு ‘பல்மனேரி எம்போலிசம்’ என்று பெயர். நீண்ட நேரம் விமானத்தில் பயணிப்பவர்களையும் இந்த நோய் தாக்கும் ஆபத்து உண்டு.

# டி.வி. மட்டுமல்ல, செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டரை இப்படிப் பார்த்தாலும் இந்நோய் வரலாம்.

# இப்படி நுரையீரலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுத்துக்கொள்ள முடியும். சிறிது நேரம் நடப்பது, ஓய்வெடுத்தல், கை, கால்களை அசைப்பது, தண்ணீர் குடிப்பது போன்ற சிறிய அசைவுகளைச் செய்யலாம்.

குழந்தைகளே, ரொம்ப நேரம் டி.வி. பார்ப்பதற்கு முன்பு இதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்களேன்!

தகவல் திரட்டியவர்:
இர. திரு, 9-ம் வகுப்பு,
ஸ்பிரிங் ஃபீல்டு மெட்ரிக் பள்ளி,
கே.கே. நகர்,
சென்னை.

SCROLL FOR NEXT