மாயா பஜார்

உருளைக்கிழங்கின் தாயகம் எது?

செய்திப்பிரிவு

உருளைக்கிழங்கு என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும், இல்லையா? சமையலில் அடிக்கடி இடம்பிடிக்கும் உருளைக்கிழங்கின் பிறப்பிடம் எது என்று தெரியுமா? அமெரிக்காதான் உருளைக்கிழங்கின் பிறப்பிடம். அமெரிக்காவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்கு உருளைக்கிழங்கு சென்றது. அமெரிக்காவுக்கு வருமானம் ஈட்டித் தரும் பல உணவுப் பொருட்களில் உருளைக்கிழங்குக்கு முக்கிய இடம் உண்டு. அது மட்டுமல்ல, உலகில் எங்கு பஞ்சம் ஏற்பட்டாலும், பசியால் வாடுபவர்களுக்கு முதலில் கைகொடுப்பது உருளைக்கிழங்குதான்.

அமெரிக்காவில் உருளைக்கிழங்கு முதன்முதலில் விளைவிக்கப் பட்டிருந்தாலும்கூட, உற்பத்தியில் அந்த நாடு முதலிடத்தில் இல்லை. உருளைக்கிழங்கு உற்பத்தியில் சீனாவுக்குத்தான் முதலிடம். இரண்டாமிடத்தை இந்தியா வகிக்கிறது. அரிசி, கோதுமை, சோளம் ஆகிய பயிர்களுக்குப் பிறகு உலகில் அதிகம் பயிர் செய்யப்படும் நான்காவதாக பயிர் உருளைக்கிழங்குதான்.

100 கிராம் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் 17 கிராமும், மாவுச் சத்து 15 கிராமும் உள்ளன. வைட்டமின் ‘சி’யும், கால்சியமும்கூட உருளைக்கிழங்கில் அதிகமுள்ளன.

தகவல் திரட்டியவர்: ஏ. அப்துல் ரஹீம், 8-ம் வகுப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை.

SCROLL FOR NEXT