மாயா பஜார்

குழந்தைப் பாடல்: நட்சத்திரம் !

செய்திப்பிரிவு

நட்சத்திரமாம் நட்சத்திரம்

கிறிஸ்துமஸ் கால நட்சத்திரம்

டிசம்பர் மாதம் பிறந்தாலே

பல வீட்டில் மின்னுது.

ஏசு பிறப்பைச் சொல்லவே

அன்று வானில் வந்தது

எங்கள் மனம் மகிழவே

இன்று வீட்டில் மின்னுது.

வண்ணம் பல கொண்டது

பல வடிவில் மின்னுது

நீண்ட வாலும் இருக்குது

நின்று பார்க்க தோணுது.

பாதை தெரியா ஞானிகளுக்கு

பாதை அன்று காட்டியது

பிரகாசமாய் வாழவே

இன்று நமக்குச் சொல்லுது.

ஏற்றத் தாழ்வு இல்லாமல்

எல்லார் வீட்டிலும் தொங்குது

நாமும் அப்படி வாழுவோம்

ஏற்றத் தாழ்வை மறந்து தான் !

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

SCROLL FOR NEXT