1. உலகிலேயே வைரம் அதிகம் கிடைக்கும் கண்டம் எது?
அ. ஆசியா ஆ. ஆஸ்திரேலியா இ. ஐரோப்பா ஈ. ஆப்பிரிக்கா
2. பாரத ரத்னா விருது முதன்முதலில் யாருக்கு வழங்கப்பட்டது?
அ. ராஜாஜி ஆ. காந்தி இ. நேரு ஈ. காமராஜர்
3. உலகின் மிகவும் குட்டி நாடு எது?
அ. மொனாக்கோ ஆ. வாடிகன் இ. நவ்ரு ஈ. துவாலு
4. பிஹார் தலைநகர் பாட்னாவின் பழைய பெயர் என்ன?
அ. நாளந்தா ஆ. பானிபட் இ. பாடலிபுத்திரம் ஈ. கோல்கொண்டா
5. உலகில் தேக்கு அதிகமாக விளையும் நாடு எது?
அ. மியான்மர் ஆ. தாய்லாந்து இ. சீனா ஈ. நியூசிலாந்து
விடை : 1 - ஈ, 2 - அ, 3 - ஆ, 4 - இ, 5 - அ
கேள்வி கேட்டவர்: கி. குமரன், 8-ம் வகுப்பு, தியாகி நடுநிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.