வார்த்தைத் தேடல்
மேலே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக் குவியலில் ‘தீபாவளி’ தொடர்பான 10 வார்த்தைகள் மறைந்திருக்கின்றன. மேலே, கீழே, குறுக்கில் தேடி அவற்றைக் கண்டுபிடித்து எழுதுங்கள்.
விடுகதை
1. அடர்ந்த காட்டில் ஒற்றையடிப் பாதை. அது என்ன?
2. பூவுக்குள் பூ வைத்துப் போர்த்திய பூ. அது என்ன பூ?
3. தச்சன் செய்யாத கதவு. மூடினாலும் திறந்தாலும் சத்தமே வராத கதவு. அது என்ன?
4. முதுகைத் தொட்டால் மூச்சு விடும். பல்லைத் தொட்டால் பாட்டு பாடும். அது என்ன?
5. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளைவெள்ளை முத்துகள். அது என்ன?
6. சிவப்புப் பைக்குள் குட்டித் தங்க காசுகள். அது என்ன?
7. கொண்டையில் சிவப்பு பூ சூடியிருக்கும். அதற்கே ரொம்பவும் சிலிர்த்துக்கொள்ளும். அது என்ன?
8. கல்லிலும் முள்ளிலும் பாதுகாக்கும். சறுக்கலில் கைவிட்டுவிடும். அது என்ன?
9. பச்சைத் தோல் கொண்ட குண்டுக் காய்க்கு பஞ்சு போன்ற சதை. உள்ளே கடினமான எலும்பு. உடைத்தால் உள்ளமெல்லாம் வெள்ளை. அது என்ன?
10. வெளிச்சத்திலே பிடிப்பதை இருட்டிலே பார்க்கிறோம். அது என்ன?
விடுகதை போட்டவர் :
எஸ்.சாம்சன் விஜய், 4-ம் வகுப்பு, குழந்தை இயேசு நர்சரி பள்ளி, திருச்சி.