மாயா பஜார்

வானத்திலே திருவிழா! - மழை பாடல்

பொன்.செல்வகணபதி

வானத்திலே திருவிழா!

வழக்கமான ஒருவிழா

இடிஇடிக்கும் மேகங்கள்

இறங்கி வரும் தாளங்கள்!

மின்னலொரு நாட்டியம்

மேடை வான மண்டபம்

தூறலொரு தோரணம்

தூய மழை காரணம்!

எட்டுத்திசை காற்றிலே

ஏக வெள்ளம் ஆற்றிலே!

தெருவிலெல்லாம் வெள்ளமே

திண்ணையோரம் செல்லுமே!

தவளை கூடப் பாடுமே

தண்ணீரிலே ஆடுமே!

பார்முழுதும் வீட்டிலே

பறவைகூட கூட்டிலே!

அகண்டவெளி வேடிக்கை

ஆண்டுதோறும் வாடிக்கை!

நன்றி: வானத்திலே திருவிழா, பொன்னா பதிப்பகம்

SCROLL FOR NEXT