மாயா பஜார்

புதிர் பக்கம் - 14/10/2015

செய்திப்பிரிவு

ஜாலிப் புதிர்

ஆறு பூனைகளுக்கு ஆறு எலிகளைச் சாப்பிட ஆறு நிமிடங்கள் ஆகும். அப்படியானால் நூறு எலிகளை நூறு நிமிடங்களில் சாப்பிட எத்தனை பூனைகள் தேவைப்படும்?

- புதிர் போட்டவர்: விஷால், 7-ம் வகுப்பு,
வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
காரமடை.

விடுகதை

1. அமைதியான பையன், அடிக்காமலேயே அழுவான். அவன் யார்?

2. இலை இல்லை, பூ இல்லை, கொடி உண்டு. அது என்ன?

3. அதிவேகமாக

ஓடும் குதிரை, ஆடியபடி செல்லும் குதிரை. போட்ட கோட்டைத் தாண்டாமல் ஓடும். அது என்ன?

4. எங்க அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது. அது என்ன?

5. ஒரே வயிற்றில் பிறந்தார்கள். ஒரு பிள்ளை ஓடுவான், இன்னொரு பிள்ளை நடப்பான். அது என்ன?

6. உருளும் வீட்டைச் சுற்றிக் கருப்பு வேலி. அது என்ன?

7. இவன் வலையைப் பின்னுவான். ஆனால், மீன் பிடிக்க மாட்டான். அது என்ன?

8. விரல் இல்லாமலேயே ஒரு கை. அது என்ன கை?

9. பற்கள் இருந்தாலும் கடிக்காது. அது என்ன?

10. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?

விடுகதை போட்டவர்: கே. ராஜசேகர்,
5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பொதட்டூர்,
திருவள்ளூர்.

வித்தியாசம் என்ன?

இரண்டு படங்களுக்கும் இடையே ஏழு வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்களேன்.

SCROLL FOR NEXT