துவாலு உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. வாத்திகன், மொனாக்கோ, நவ்ரு-வுக்கு அடுத்து சிறிய நாடு துவாலு. பசிபிக் கடலில் ஹவாய் தீவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள தீவுக் கூட்டங்களைத்தான் துவாலு தீவு என்றழைக்கிறார்கள். துவாலு நாட்டில் மொத்தமே நான்கு தீவுகள்தான் உள்ளன.
பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பாட்டில்தான் இந்தத் தீவு நாடு இருந்தது. 1978-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இந்தத் தீவுக்கு விடுதலை கிடைத்தது. துவாலு தீவின் மொத்தப் பரப்பளவு வெறும் 16 சதுர கி.மீ. தான். இந்தத் தீவு நாட்டில் மொத்தமே 10,872 பேர் மட்டுமே வசிக்கிறார்கள்.
கடல் மட்டத்திலிருந்து வெறும் நான்கு மீட்டர் உயரத்தில் இந்தத் தீவுகள் அமைந்துள்ளன. உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்துவருகிறதல்லவா? துவாலு வெறும் நான்கு மீட்டர் உயரத்தில் இருப்பதால், விரைவில் கடல் நீரில் மூழ்கிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். அந்தப் பயத்தில் நாட்டை விட்டுப் பலரும் வெளியேறிவருகிறார்கள்.
தகவல் திரட்டியவர்:
ஆர். பிரசன்னா, 10-ம் வகுப்பு, ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.