போட்டியில் பங்கு பெற்ற அத்தனை குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘என் அன்பு கலாம் தாத்தா’ கட்டுரைப் போட்டியை அறிவித்திருந்தோம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கட்டுரைகளை அனுப்பி யிருந்தார்கள்.
கட்டுரைகள் பல சுற்றுகளாகப் பிரிக்கப் பட்டன. பரிசுக்குரிய கட்டுரைகளை காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ந.மாதவன் தேர்வு செய்தார். போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் பாராட்டையும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைப் போட்டியில்
ரூ. 5,000 மதிப்புள்ள சென்னை மொபைல்ஸ் வழங்கும் பரிசுக் கூப்பனை வென்ற இரு குழந்தைகள்:
ஜெ.ஜி. இலக்கியா, 6-ம் வகுப்பு, செயின்ட் ஜோசப் குளுனி பள்ளி, புதுச்சேரி.
பு. செந்தமிழ்வேலவன், 7-ம் வகுப்பு, ஜவஹர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, நெய்வேலி.