வீட்டில் பயன்படுத்தப்படாத காகிதத் தட்டுகள் இருக்கின்றனவா? அவற்றைத் தூக்கி எறிந்துவிடாதீர்கள். அவற்றைப் பயன்படுத்தி ஒரு அழகான கிரீடம் செய்யலாம்.
என்னென்ன தேவை?
காகிதத் தட்டு
கத்தரிக்கோல்
எப்படிச் செய்வது?
காகிதத் தட்டை எடுத்துப் பாதியாக மடித்துக்கொள்ளுங்கள்.
மடித்த பிறகு படத்தில் காட்டியபடி இடைவெளி விட்டுச் சீராக வெட்டிக்கொள்ளுங்கள்.
இப்போது மடித்த தட்டை விரியுங்கள். விரித்த பிறகு முக்கோணத் துண்டுகள் கிடைக்கும். அதை வெளிப்புறமாக மடித்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான், இப்போது அழகான கிரீடம் தயாராகிவிட்டதா?. அதை இன்னும் அழகாக்க, காகிதத் தட்டில் பட்டன்களை ஒட்டிக்கொள்ளுங்கள். இந்த அழகான கிரீடத்தைத் தலையில் சூட்டிக்கொண்டு மகிழுங்களேன்.
படங்கள்: மோ.வினுப்பிரியா