மாயா பஜார்

பொம்மி தீபாவளி மலர்

செய்திப்பிரிவு

சமீப ஆண்டுகளாக பொம்மி சிறார் மாத இதழும் தீபாவளி மலரை வெளியிட்டுவருகிறது.

2020 பொம்மி தீபாவளி மலரில் மோ. கணேசனின் ‘வாலுவிடம் கேளுங்கள்’, இரா. கதைப்பித்தனின் ‘நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை’ ஆகிய கேள்வி-பதில் பகுதிகள் அறிவியல் அறிவுக்கும் பொதுஅறிவுத் தேடலுக்கும் தீனிபோடுகின்றன.

பாவண்ணன், பெ. தூரன், அழ. வள்ளியப்பா ஆகியோரின் பாடல்கள், காலம் காலமாகப் பாடப்பட்டுவரும் குழந்தைகளுக்கான வழக்குப் பாடல்கள் போன்றவை குழந்தைகளே பாடி மகிழக்கூடியவை. ராஜே, ராம்கி ஆகியோரின் படக்கதைகள் வாசிக்கத் தொடங்கும் குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும்.

உதயசங்கர், கொ.மா.கோ. இளங்கோ, அழ. வள்ளியப்பாவின் ‘நல்ல நண்பர்கள்’, மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் ‘ஊர்வலம் போன பெரிய மனுஷி’, ரஸ்கின் பாண்டின் ‘சீதாவின் ஆறு’, அழ.வள்ளியப்பா மொழிபெயர்ப்பில் ‘சோனாவின் பயணம்’ (தாரா திவாரி) என்று குறிப்பிடத்தக்க புதிய, பழைய கதைகள் இந்த மலரில் இடம்பெற்றுள்ளன.

இவற்றுடன் சிதம்பரம் ரவிச்சந்திரனின் அறிவியல் கட்டுரைகள், பாணி சிவனின் வரலாற்றுத் தலைவர்கள் குறித்த கட்டுரைகள், பாம்புகளைக் குறித்து கிருஷ்ணன் ரஞ்சனாவின் கட்டுரை, விளையாட்டுகள் குறித்த அறிமுகம் போன்றவையும் உள்ளன.

- நேயா

பொம்மி தீபாவளி மலர் தொடர்புக்கு: 97506 97943

SCROLL FOR NEXT