மாயா பஜார்

நீங்களே செய்யலாம்: அழகான பொம்மையாகும் சாக்ஸ்!

மோ.வினுப்பிரியா

வீட்டில் பயன்படுத்தாத சாக்ஸ் இருந்தால் என்ன செய்வீர்கள்? தூக்கி எறிந்துவிடுவீர்கள், அல்லது பொருட்களைத் துடைக்கப் பயன்படுத்துவோம் இல்லையா? இனி, அப்படிச் செய்யாதீர்கள். பயன்படுத்தாத சாக்ஸில் அழகான பொம்மை செய்யலாம். சாக்ஸில் பொம்மை செய்ய நீங்கள் தயாரா?

தேவையான பொருட்கள்

சாக்ஸ், பொத்தான்கள், இரண்டு ரப்பர் பேண்டுகள், சிறிய துணி (சால்வைக்காக), மணிகள், பசை, கத்தரிக்கோல்.

செய்முறை

சாக்ஸ்ஸைப் பாதியாக வெட்டிக்கொள்ளுங்கள். கீழ்ப்பகுதியில் பருத்தியை வைத்து நிரப்புங்கள்.

படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் ரப்பர் பேண்டுகளைப் போடுங்கள்.

பொம்மை மீது சிறிய துணியைச் சால்வையாகப் போர்த்துங்கள்.

கண்களுக்காக மணிகளை நடுவில் ஒட்டுங்கள்.

அதை இன்னும் அழகுப்படுத்த பொம்மை மீது பொத்தான்களை ஒட்டுங்கள்.

இப்போது அழகான பொம்மை தயாராகிவிட்டது.

இந்தப் பொம்மையை வைத்து நீங்கள் விளையாடலாம், அல்லது உங்கள் நண்பர்களுக்குப் பரிசாகக் கொடுக்கலாமே!

படங்கள்: மோ. வினுப்பிரியா

SCROLL FOR NEXT