மாயா பஜார்

தெரியுமா?- வெல்வெட் ஆப்பிள்

செய்திப்பிரிவு

சிம்லா ஆப்பிள், ஊட்டி ஆப்பிள், அமெரிக்க ஆப்பிள் என்று நிறைய ஆப்பிள்களைச் சாப்பிட்டிருப்பீர்கள். வெல்வெட் ஆப்பிளைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் பெயரில் ஒரு ஆப்பிள் விளைகிறது.

இந்தியாவில் இதை ‘வெல்வெட் ஆப்பிள்’ என்று சொல்வதைப் போல மபோலா, வெல்வெட் பெர்சிமன், கொரியன் மாங்காய், ஜப்பானிய ஆப்பிள் என வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாயகமாகக் கொண்டது இந்த ஆப்பிள்.

‘எபினேசிய’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது இது. இந்தப் பழத்தைப் பிரித்தவுடன் பாலாடைக் கட்டி போன்ற வாசம் வீசும். இந்த ஆப்பிளில் மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பரலியார், கல்லார் ஆகிய பகுதிகளில் வெல்வெட் ஆப்பிள் விளைகிறது. வெப்பப் பகுதிகளிலும் மிதவெப்பப் பகுதிகளிலும் மட்டுமே வளரக்கூடியது. வெல்வெட் ஆப்பிள் மரம் சுமார் 100 அடி உயரத்துக்கும் மேல் வளரக் கூடியது.

தகவல் திரட்டியவர்: பி. நாகராஜன், 8-ம் வகுப்பு, அரசு மேல் நிலைப் பள்ளி, திண்டிவனம்.

SCROLL FOR NEXT