நம்பிக்கை நாற்றுகள், l வெற்றிச்செழியன்
பசித்திரு பசித்திரு பசித்திரு - நல்
அறிவெனும் பசியுடன் வாழ்ந்திடு
அறிவெனும் பசியுடன் தேடியே – நீ
நாளும் பலவும் கற்றிடு.
இதுபோன்ற குழந்தைகள் பாடக்கூடிய, வாசிக்கக் கூடிய நம்பிக்கைப் பாடல்கள் நிறைந்த நூல்.
வளமை பதிப்பகம், தொடர்புக்கு: 98409 77343
பறக்கும் திமிங்கிலம், l யூமா வாசுகி
ராஜஸ்தானைச் சேர்ந்த ஓர் இளவரசிக்கு அவளுடைய தாத்தா அற்புத ஆற்றல் வாய்ந்த மோதிரம் ஒன்றைக் கொடுக்கிறார். அந்த மோதிரத்தை அணிந்துகொண்டால், ஒருவரை எந்த உருவத்துக்கு வேண்டுமானாலும் மாற்றிவிடலாம். இதனால் அவளுடன் யாருமே விளையாட வருவதில்லை. அதன் பிறகு என்ன நடக்கிறது? இதுபோன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐம்பது நாடோடிக் கதைகளின் தொகுப்பு.
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924
விடுமுறை வந்தாச்சு,l ரவீந்திரநாத் தாகூர், l தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ
கிராமத்தில் குறும்புக்காரச் சிறுவனாக வளரும் பதிக்கை, கொல்கத்தாவில் உள்ள மாமா வீட்டுக்கு அனுப்புகிறார்கள். நகரப் பள்ளிகளும் நகரச் சூழ்நிலையும் அவனுக்கு ஒத்துவரவில்லை. சுதந்திரத்தையும் தாய் அன்பையும் விரும்பும் பதிக், கிராமத்துக்குத் திரும்ப முயல்கிறான். குழந்தைகள் அனுபவிக்க வேண்டிய சுதந்திரம் குறித்து உணர்த்தும் புகழ்பெற்ற கதை.
நேஷனல் புக் டிரஸ்ட், தொடர்புக்கு: 044-28252663
முள்ளிக்காட்டு இதிகாசம், l பிரவீன் குமார்
முள்ளெலிகள் பற்றித் தெரியுமா? தமிழகத்தில் வாழும் அரிய, அதேநேரம் ஆபத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் சின்னஞ்சிறு முள்ளெலிகள். அவற்றின் முக்கியத்துவம், அவற்றை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறது இந்த அறிவியல் படக்கதை நூல். ஓவியம் வெண்பா.
லைஃப் புக்ஸ், தொடர்புக்கு: 93612 4460
ஜாகிரும் அவனுடைய தபலாவும், l சந்தியா ராவ், தமிழில்: கார்குழலி
பிரபல தபலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைனின் தந்தை அல்லாரக்காவும் தபலா இசைக்கலைஞர். அதையும் மீறி ஜாகிருக்குத் தாள வாத்தியக் கருவிகளின் மீது, இளம் வயதிலேயே பெரும் ஈர்ப்பு இருந்தது. அவருடைய சிறு வயதிலிருந்து ஒரு கலைஞராக மாறி, இசை மேதையாக ஜாகிர் உருவெடுத்ததை சுவாரசியக் கதையாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
தூலிகா, தொடர்புக்கு: 044-2499 1639