மாயா பஜார்

டி.வி.க்கு உயிர் கொடுத்தவர்!

செய்திப்பிரிவு

இன்று ரிமோட்டை அமுக்கினால் நினைத்த நேரத்தில் டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர் ரஷ்யாவில் பிறந்த அறிவியல் மேதை விளாடிமிர் சுவோரிகின். எதிர்மின் கதிர் குழாயைக் (கேதோடு ரே டியூப்) கண்டுபிடித்தது இவர்தான். 1929-ம் ஆண்டில் ஒலியையும் படத்தையும் விண்வெளிக்கு அனுப்பி, அவற்றை திரும்பப் பெறும் முறையில் வெற்றிக் கண்டார்.

அதன்பிறகு சான்பெயர்டு என்ற அறிவியல் மேதை அதை இன்னும் மேம்படுத்தி, இன்று நாம் காணும் தொலைக்காட்சிப் பெட்டியை உருவாக்கினார். தொடக்கத்தில் கறுப்பு வெள்ளையாகவே காட்சிகளை வழங்கிய தொலைக்காட்சி பெட்டிகள், இன்று பல வண்ண கலவையில் வழங்குகின்றன. ஆரம்பத்தில் சில மணி நேரம் டி.வி.யில் நிகழ்ச்சிகளைக் காண முடிந்தது. இப்போதோ 24 மணி நேரமும் டி.வி. நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.

தகவல் திரட்டியவர்: எம்.என். ஹஸ்மிதா, 7-ம் வகுப்பு, ஐ.ஐ.பி.இ., லக்‌ஷ்மி ராமன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி.

SCROLL FOR NEXT