மாயா பஜார்

குழந்தைப் பாடல்: விருந்து

செய்திப்பிரிவு

அத்தி இலையில் படையலிட்டோம்

விருந்துக்கு வாங்க

ஐயனாருக்குப் பொங்கல் வைத்தோம்

விருந்துக்கு வாங்க.

மிளகாய் அரைத்துக் குழம்பு வைத்தோம்

விருந்துக்கு வாங்க

உருளைக்கிழங்கு பொரியல் செய்தோம்

விருந்துக்கு வாங்க.

கத்தரிக்காய் கூட்டு வைத்தோம்

விருந்துக்கு வாங்க

காரமும் உப்பும் சரியாய் இருக்குது

விருந்துக்கு வாங்க.

அப்பளம் வற்றல் எல்லாம் உண்டு

விருந்துக்கு வாங்க

ஆப்பிள் மாதுளை மாம்பழம் உண்டு

விருந்துக்கு வாங்க.

சின்னப் பிள்ளைப் பட்டாளத்தின்

விருந்துக்கு வாங்க

திகட்டத் திகட்ட மகிழ்ச்சியோடு

சாப்பிட்டுப் போங்க.

SCROLL FOR NEXT