உங்கள் வீட்டு செல்ல பிராணி எது? நாயா, பூனையா, கிளியா? ஆனால், சீனாவின் டோங்குயன் பகுதியைச் சேர்ந்த அல்ஹி லியூ என்ற சிறுவனின் செல்லக்குட்டி எது தெரியுமா? மலைப் பாம்பு!
அழே ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது அவனுடைய அப்பா ஒரு மலைப் பாம்பை வாங்கி வந்தார். அழே கொஞ்சம் வளர ஆரம்பித்தவுடன் மலை பாம்பு அவனுடைய நண்பனாகிவிட்டது. அப்போது முதல் மலை பாம்புடன் தான் தூங்க ஆரம்பித்தான் அல்ஹி லியூ.
அதுமட்டுமல்ல, செல்லப் பிராணியுடன் நடப்பது, விளையாடுவது என அந்தப் பாம்புதான் லியூவின் உலகமாகிபோனது. அந்த மலை பாம்பும் யாரையும் சீண்டவும் செய்யாது.
லியூ இப்போது உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறான். அதனால் நண்பனை விட்டு ஹாஸ்டலில் தங்கியுள்ளான். அதனால் வார இறுதியில் மட்டுமே வீட்டுக்கு வந்து பாம்புடன் விளையாட முடிகிறதாம். இப்போது 13 வயதாகும் லியூவுக்கு ஒரே ஆசைதான். அது பெரியவன் ஆனதும் உயிரியலாளர் ஆக வேண்டும் என்பதுதான். அதுக்குக் காரணம், இந்தப் பாம்பு நண்பன்தான்!
தகவல் திரட்டியவர்: பா. ஆதித்யா, 6-ம் வகுப்பு, ஸ்ரீ நாராயணகுரு பதின்ம மேல்நிலைப் பள்ளி, சன்னதி வீதி, காஞ்சிபுரம்.