மாயா பஜார்

அறிவியல் மேஜிக்: வளையும் தண்ணீர்!

செய்திப்பிரிவு

குழாயில் நேராக வந்துகொண்டிருக்கும் தண்ணீரை வளைக்க முடியுமா? ஒரு சோதனையைச் செய்வோமா?

என்னென்ன தேவை?

சீப்பு

தண்ணீர்க் குழாய்

எப்படிச் செய்வது?

# தண்ணீர் மெலிதாக வரும் அளவுக்குக் குழாயைத் திறந்துவைத்தால் போதும்.
# சீப்பை எடுத்து நன்றாகத் தலைமுடியில் தேய்த்துக்கொள்ளுங்கள்.
# சீப்பைத் தண்ணீருக்கு அருகில் கொண்டு செல்லுங்கள்.
# தண்ணீர் ஒரு பக்கமாக வளைவதைக் காணலாம்.
# சீப்பைத் தள்ளி வைக்கும்போது தண்ணீர் நேராவதையும் பார்க்கலாம்.
# நேராக வந்துகொண்டிருந்த தண்ணீர், சீப்பை அருகில் கொண்டு சென்றதும் வளைய என்ன காரணம்?

காரணம்

இந்தச் சோதனையில் ‘ஸ்டாடிக் எலெக்ட்ரிசிட்டி’ எனப்படும் நிலை மின்சாரம் பயன்படுகிறது. சீப்பைத் தேய்க்கும்போது தலைமுடியில் உள்ள அணுக்களின் விளைவால், எலெக்ட்ரான்கள் சீப்பில் சேகரமாகின்றன. அதாவது, சீப்பு சார்ஜ் ஆகிறது. இந்த சார்ஜ் எதிர்மறையான தன்மையைப் பெற்றது. எதிர்மறையான சார்ஜ் ஏற்றப்பட்ட சீப்பைத் தண்ணீர் குழாய் அருகே கொண்டு செல்லும்போது,​ அது தண்ணீரின் நேர்மறை ஆற்றலால் ஈர்க்கப்படுகிறது. அதன் காரணமாகத் தண்ணீர் வளைகிறது. தள்ளி வைக்கும்போது தண்ணீர் நேராகிறது.ஓவியம்: வாசன்நூல் அறிமுகம்

- மிது கார்த்தி

SCROLL FOR NEXT