குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாடல்களைப் பாடாத தமிழ்க் குழந்தைகள் இருக்க முடியாது. இன்று அவர் எழுதியவை என்று தெரியாமலேயே ‘மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்’, ‘தோ தோ நாய்க்குட்டி, துள்ளி வா வா நாய்க்குட்டி’ போன்ற புகழ்பெற்ற பாடல்களைக் குழந்தைகள் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
சிறாரை அதிகம் நேசித்தவர். சிறாருக்காகவே கதை, பாடல், அறிவியல் கட்டுரைகள் என்று தன் வாழ்நாள் முழுவதும் எழுதியவர். குழந்தை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்து 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியவர். ஏராளமான சிறார் எழுத்தாளர்களை உருவாக்கியவர், அழ. வள்ளியப்பா.
விரைவில் வரவுள்ள இவரது நூற்றாண்டைக் கொண்டாடும் விதத்தில், 4 தொகுப்புகளாகப் பாடல்கள் வெளிவந்துள்ளன. பளபளப்பான கெட்டித் தாளில், வண்ணப் படங்களுடன் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.
பாப்பாவுக்குப் பாட்டு 1, 2
சின்னஞ்சிறு பாடல்கள் 1, 2
குழந்தைப் புத்தக நிலையம், ரூ. 60/-. தொடர்புக்கு: 9840710422.