மாயா பஜார்

அறிவியல் மேஜிக்: அடர்த்தி என்ன?

செய்திப்பிரிவு

மிது கார்த்தி

வெவ்வேறு திரவங்களை ஒன்றாகக் கலக்கினால் என்ன ஆகும்? ஒரு சோதனையைச் செய்து பார்ப்போமா?

என்னென்ன தேவை?
மூடியுடன் கூடிய கண்ணாடி பாட்டில்
தேன்
எண்ணெய்
தண்ணீர்

எப்படிச் செய்வது?
கண்ணாடி பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிது தேனை (50 மி.லி.) ஊற்றுங்கள்.

பிறகு அதே அளவுக்கு எண்ணெய்யை பாட்டிலில் ஊற்றுங்கள்.

பிறகு தண்ணீரைச் சற்று அதிகமாக ஊற்றுங்கள்.

இப்போது பாட்டிலின் மூடியை இறுக மூடி வேகமாகக் குலுக்குங்கள்.

பாட்டிலை ஒரு மேசையில் வையுங்கள்.

மேசையில் வைத்தவுடன் மூன்று திரவங்களும் ஒன்றாகக் கலந்திருப்பது போன்று உங்களுக்குத் தெரியும். ஆனால், ஓரிரு நிமிடங்களில் மூன்று திரவங்களும் தனித்தனியாகத் தெரிவதைக் காணலாம்.

எண்ணெய் தண்ணீரின் மேலே மிதப்பதையும் தேன் பாட்டிலின் அடியில் தங்குவதையும் தண்ணீர் நடுவில் இருப்பதையும் பார்க்க முடியும். இதற்கு என்ன காரணம்?

காரணம்
ஒவ்வொரு திரவத்துக்கும் ஒவ்வொரு விதமான அடர்த்தி இருக்கும். அந்த அடர்த்திதான் இதற்குக் காரணம். தண்ணீர், எண்ணெய், தேன் ஆகிய மூன்றும் வெவ்வேறு அடர்த்திகளைக் கொண்டவை. இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று கலக்காது. இதில் எண்ணெயின் அடர்த்தி தண்ணீரைவிடக் குறைவு. எனவேதான் அது தண்ணீரின் மேலே மிதக்கிறது. ஆனால், தேனின் அடர்த்தி தண்ணீரைவிட அதிகம். அது பாட்டிலின் அடியில் தங்குகிறது.

SCROLL FOR NEXT