மாயா பஜார்

விடுகதைகளுக்கு விடை என்ன?

செய்திப்பிரிவு

1. ஓடுவான், வருவான்; ஒற்றைக் காலில் நிற்பான். அவன் யார்?

2. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்து. அது என்ன?

3. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு. ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகையின் நடுவே ஒரு குளம். அது என்ன?

4. எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். தண்ணீர் குடித்தால் இறந்துவிடுவேன். நான் யார்?

5. ஊர் முழுவதும் சுற்றுவேன். வீட்டுக்குள் நுழைய மாட்டேன். நான் யார்?

6. மஞ்சள் குருவி ஊஞ்சலாடுது. அது என்ன?

- எஸ். ஹரினி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, போளூர், கோத்தகிரி.

விடை: 1. கதவு, 2. வெண்டைக்காய், 3. தேங்காய், 4. நெருப்பு, 5. செருப்பு, 6. எலுமிச்சை

------------------

1. உடம்பு முழுவதும் முள். அது என்ன?

2. கையும் இல்லை, காலும் இல்லை. ஓடிக்கொண்டே இருப்பேன். நான் யார்?

3. வெள்ளை மணலுக்குள்ளே தங்கம். அது என்ன?

4. பச்சைப் பேருந்துக்குள் சிவப்பு பயணிகள். அவர்கள் அணியும் தொப்பி கறுப்பு. அது என்ன?

5. உன்னை எங்கு சென்றாலும் தொடர்ந்து வருவான். அது யார்?

- கே. நடராஜன், கோவை.

விடை: 1. சீப்பு, 2. நேரம், 3. முட்டை, 4. தர்பூசணி, 5. நிழல்

SCROLL FOR NEXT