மாயா பஜார்

நீங்களே செய்யலாம்: ஜம்முன்னு ஒரு பாராசூட்

செய்திப்பிரிவு

பாராசூட் சாகசங்களைப் பார்த்திருக்கிறீர்களா? பாராசூட்டில் தொங்கிக் கொண்டு வீரர், வீராங்கனைகள் அந்தரத்தில் விண்ணில் வலம் வருவதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும் இல்லையா? அதைப் போன்ற பாராசூட்டை வீட்டிலேயே செய்யலாமா?

தேவையான பொருள்கள்:

டிசைன்கள் அச்சிடப்பட்ட வண்ணமயமான துணி, காம்பஸ், பென்சில், கல், கத்தரி, ஊசி, நூல் கண்டு.

செய்முறை:

1. அச்சிடப்பட்ட துணியில் 45 செ.மீ. விட்டம் கொண்ட வட்டத் துண்டை வரைந்து வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

2. இந்த வட்டத் துண்டை சமமான எட்டு பாகங்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

3. படத்தில் காட்டியபடி 30 செ.மீ. நீளமுள்ள கயிறுகளை எட்டு முனையிலும் நூலின் உதவியுடன் கட்டிக்கொள்ளுங்கள்.

4. இப்போது அனைத்து முனைகளையும் ஒன்றாகக் கட்டி அதில் ஒரு கல்லை இணைத்துக் கட்டுங்கள்.

5. இப்போது இந்த பாராசூட்டை உயரத்தில் இருந்து அப்படியே கீழே போடுங்கள். காற்றில் அழகாகப் பறந்தபடி அது கீழிறங்குகிறதா?

© Amrita Bharati, 2015

SCROLL FOR NEXT